» சினிமா » செய்திகள்
விஜய் - த்ரிஷா விவகாரம்: மனதில் பட்டதை பேசியதாக சமுத்திரக்கனி விளக்கம்!
புதன் 25, மார்ச் 2026 5:39:37 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்துத் தான் பேசியதாகப் பரவிய வீடியோவிற்கு, தான் பேசியதில் எந்த வருத்தமும் இல்லை என்று இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகச் செய்திகள் பரவின. அந்த மனுவில், "நடிகை ஒருவருடன் கணவர் தொடர்பில் இருப்பதாகவும், கடந்த 4 ஆண்டுகளாகத் தொடரும் இந்த விவகாரத்தைக் கண்டித்தும் அவர் கேட்கவில்லை; எனவே சேர்ந்து வாழ விரும்பவில்லை" எனக் குற்றம்சாட்டப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே, சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷாவும், விஜய்யும் ஒரே மாதிரியான ஆடையில் கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, நடிகர் சமுத்திரக்கனி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் அவர் குறிப்பிட்டதாவது:
"இதெல்லாம் விளையாட்டா? யாரைப் பழிவாங்க இதைச் செய்கிறார்? ஒரு பிரச்சினை நடக்கும்போது நடிகையை வெளியில் கூட்டி வருகிறார். நான்கு சுவருக்குள் இதையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும். சொந்தக் கட்சிக்காரர்களே இதற்கு மேல் முட்டுக்கொடுக்க முடியாது என்று புலம்புகிறார்கள்."
விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் சமுத்திரக்கனி பேசியிருந்தாலும், இது விஜய் - த்ரிஷா விவகாரத்தைக் குறித்தே அவர் பேசியுள்ளார் என்று இணையவாசிகள் விவாதித்து வந்தனர். இந்நிலையில், இந்த வைரல் வீடியோ குறித்து சமுத்திரக்கனி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர்: "நான் பேசும்போது வீடியோ எடுக்கிறார்கள் என்பது எனக்கு முன்பே தெரியும். நான் பேசியதன் முன்னுரையை அந்தத் தம்பி எடுக்கவில்லை, முடிவுரையை மட்டும் தான் எடுத்தான். சரி எடுக்கட்டும் என விட்டுவிட்டேன். எனக்கு உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசத் தெரியாது.
சந்தோஷமோ, வலியோ, வேதனையோ அதை அப்படியே பிரதிபலித்துவிட்டு நான் அடுத்த வேலைகளுக்குச் சென்றுவிடுவேன். நான் பேசியது வெளியில் வந்துவிட்டது. அதற்கு மேல் 'மானே, தேனே' எல்லாம் சேர்த்து இணையத்தில் தம்பிகள் தங்கள் வேலையைப் பார்த்துவிட்டார்கள். அதை நான் ஒரு குற்றமாக நினைக்கவில்லை; பேசிவிட்டுப் பின் வருத்தப்படவும் இல்லை. என் மனதிற்குப் பட்டதை நான் பேசினேன்." இவ்வாறு சமுத்திரக்கனி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

100 மில்லியன் பார்வையாளர்கள்: யூடியூப்பில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் புதிய சாதனை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:05:45 PM (IST)

இறுதி கட்டத்தை எட்டிய ஜன நாயகன் சென்சார் பணிகள்: மே 8-ல் ரிலீஸ்? - ரசிகர்கள் உற்சாகம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:03:15 PM (IST)

சல்மான் கான் - நயன்தாரா கூட்டணியின் புதிய படம்: ஈகைத் திருநாளுக்கு வெளியீடு!
சனி 25, ஏப்ரல் 2026 11:55:40 AM (IST)

ஜனநாயகன் திரைப்படம் லீக் விவகாரம்: படத்தொகுப்பாளர் இடை நீக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:09:09 AM (IST)

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? - கமல்ஹாசன் பதில்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:06:07 PM (IST)

ஜனாதிபதி விருந்தில் நடிகை பிரியங்கா மோகன்: தென் கொரிய அதிபருடன் சந்திப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 4:49:10 PM (IST)

