» சினிமா » செய்திகள்
இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த ராஷ்மிகா!!
வியாழன் 26, பிப்ரவரி 2026 3:50:46 PM (IST)

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்தியத் திரையுலகில், இந்திய மீடியாக்களில் சமீபகாலத்தில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு திருமண செய்தியாக நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் இருந்தது. நேற்று காலையும், மாலையும் முறையே தெலுங்கு முறைப்படியும், கொடவா முறைப்படியும் அவர்களது திருமணம் உதய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விஜய் தேவரகொண்டா குறித்தும் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது. ராஷ்மிகா மந்தனாவின் இந்த திருமண பதிவு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பதிவு (போஸ்ட்) சாதனையை முறியடித்துள்ளது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, விராட் கோலி வெளியிட்ட பதிவு 20 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை புரிந்தது.
தற்போது ராஷ்மிகாவின் திருமணப் பதிவு 25 மில்லியன் லைக்குகளை பெற்று பெரும் சாதனை புரிந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த கிஷோர் மோண்டல் வெளியிட்டு, வைரலான ரீல்ஸ் 51 மில்லியன் லைக்ஸ் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு ராஷ்மிகாவின் திருமண பதிவு லைக்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராஷ்மிகாவின் திருமணப் பதிவு 25 மில்லியன் லைக்குகளை பெற்று பெரும் சாதனை புரிந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த கிஷோர் மோண்டல் வெளியிட்டு, வைரலான ரீல்ஸ் 51 மில்லியன் லைக்ஸ் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு ராஷ்மிகாவின் திருமண பதிவு லைக்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய படங்களின் டிரைலர்கள், டீசர்கள் வெளிவந்தால் கூட இவ்வளவு லைக்குகள் கிடைத்திருக்காது. ஆனால், அவர்களது திருமணப் பதிவு புகைப்படத்திற்கு இத்தனை மில்லியன் லைக்குகள் என்பது அவர்கள் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்குமார்! - ஏ.கே. 64 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:58:11 PM (IST)

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க!" - 'ராயன்' தேசிய விருது சர்ச்சைக்கு நடிகர் தனுஷ் ஆதங்கம்!
திங்கள் 27, ஜூலை 2026 4:53:22 PM (IST)

50 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்குகளில் முதல்வரின் திரைப்படம்: எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய் சாதனை!
வியாழன் 23, ஜூலை 2026 4:51:10 PM (IST)

நிவின்பாலி-சூரி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை அக்-1ல் ரிலீஸ்
புதன் 22, ஜூலை 2026 5:54:13 PM (IST)

கணித மேதை ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா ப்ரீத்தி முகுந்தன்? - உண்மைப் பின்னணி
திங்கள் 20, ஜூலை 2026 11:58:48 AM (IST)

72வது தேசிய திரைப்பட விருதுகள்: ராயன், கேப்டன் மில்லர், மெய்யழகன் படங்களுக்கு விருதுகள்!
சனி 18, ஜூலை 2026 8:25:07 PM (IST)

