» சினிமா » செய்திகள்
பாக்கெட் நாவல்: தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி - மாளவிகா மோகனன்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:40:57 PM (IST)

சூப்பர் டீலக்ஸ்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவும் விஜய் சேதுபதியும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘பாக்கெட் நாவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன், கிஷோர் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் பி. ஷெட்டி இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மாடர்ன் லவ் சென்னை' தொடருக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா - இளையராஜா கூட்டணி இப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.
சூப்பர் டீலக்ஸ்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்ட்ரூ லூயிஸ் திரைக்கதை எழுத, திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியை மேற்கொள்கிறார். தியாகராஜன் குமாரராஜாவின் 'டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட்' நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
கடந்த 2019-ல் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்காக விஜய் சேதுபதிக்குத் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால், 'பாக்கெட் நாவல்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீண்டும் தொடங்குகிறதா இந்தியன் 3? - இயக்குநர் ஷங்கரின் அதிரடி முடிவு!
புதன் 11, மார்ச் 2026 4:28:59 PM (IST)

தணிக்கையில் தொடரும் இழுபறி: ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:14:13 PM (IST)

விஜய் - திரிஷா விவகாரம்: இயக்குநர் பார்த்திபனின் கருத்தால் வெடித்த புதிய சர்ச்சை!
செவ்வாய் 10, மார்ச் 2026 11:10:17 AM (IST)

பேயை விட ஏஐ-யைப் பார்த்தால் தான் பயமாக இருக்கிறது : நடிகர் சந்தானம் கலகல பேச்சு!!
ஞாயிறு 8, மார்ச் 2026 1:30:36 PM (IST)

ஹாரர் - சயின்ஸ் பிக்சன் : ரைசா வில்சன் நடிக்கும் நோவா!
வியாழன் 5, மார்ச் 2026 12:08:49 PM (IST)

மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 5, மார்ச் 2026 12:02:04 PM (IST)

