» சினிமா » செய்திகள்
பருத்திவீரன் புகழ் கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
புதன் 31, டிசம்பர் 2025 12:44:55 PM (IST)
பிரபல கிராமிய பாடகியும் பருத்திவீரன் திரைப்பட பாடகியுமான லட்சுமி அம்மாள்(75) வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவுக் காரணமாக காலமானார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமி அம்மாள். இவர் ஆரம்பத்தில் பரவை முனியம்மாளுடன் இணைந்துதான் தென் மாவட்டங்களில் நடக்கும் கச்சேரிகளில் நாட்டுப்புறப் பாடல்களை பாடி வந்தார். பரவை முனியம்மாள் தூள் திரைப்படம் மூலம் புகழ் அடைந்த நிலையில், லட்சுமி அம்மாள் தனியாக கச்சேரி நடத்தி வந்தார்.
இந்த நிலையில், 2007 இல் திரைப்பட இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவான நடிகர் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் "ஊரோரம் புளிமரம், டங்கா டுங்கா" ஆகிய பிரபலமான நாட்டுப்புறப் பாடல்களை பாடியும் திரையில் தோன்றியும் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தார்.
இந்த நிலையில், 2016 இல் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால் அவரால் முன்புபோல் கச்சேரியில் பாட முடியாத நிலையில் 6 திரைப்படங்களோடு அவரது திரைப்பட ஆசைக்கும் கச்சேரிகளுக்கும் முடிவு ஏற்பட்டது. தொடர்ந்து தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாலும் அவரால் ஆரோக்கியத்தை மீட்க முடியவில்லை.
இந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு லட்சுமி அம்மாள் காலமானார். 20 வயதில் கும்மி பாட்டு, ஒப்பாரி, தாலாட்டு, தெம்மாங்கு, பக்தி, நாட்டுப்புறப் பாட்டு என கலக்கி வந்த லட்சுமி அம்மாளின் மறைவு நாட்டுப்புறக் கலையுலகிற்குப் பேரிழப்பாகும். இவரது மறைவுக்கு திரையுலகினரும், நாட்டுப்புறக் கலைஞர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடி வாங்குறவனாவது சொல்லணும்! - ஜனநாயகன் குறித்து அமீர் கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 4:54:34 PM (IST)

அடுத்து அரசியல் களம்? சினிமாவிலிருந்து விலகுகிறாரா த்ரிஷா?
வெள்ளி 20, மார்ச் 2026 10:35:50 AM (IST)

மணிரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான்: 34 ஆண்டுகால இசைப் பயணம் முடிவுக்கு வருகிறதா?
புதன் 18, மார்ச் 2026 11:20:49 AM (IST)

சர்ச்சையான நாயுடு பேச்சு: மன்னிப்பு கோரி விளக்கமளித்தார் நடிகர் பார்த்திபன்!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:10:24 PM (IST)

புடினுக்கு எதிரான ஆவணப்படத்திற்கு ஆஸ்கர்: 2026 விருது விழாவின் முக்கியத் துளிகள்!
திங்கள் 16, மார்ச் 2026 5:27:58 PM (IST)

சிறை பட வெற்றிக்குத் தமிழ் ரசிகர்களே காரணம்: இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு
சனி 14, மார்ச் 2026 11:23:29 AM (IST)

