» சினிமா » செய்திகள்
இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

இயக்குநர் ரவி அரசு மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மகுடம் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’. இதன் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதால், இப்படத்தினை விஷாலே இயக்கி வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தீபாவளி அன்று விஷால் வெளியிட்டார். கதை மட்டுமே ரவி அரசு எனவும், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் விஷால் எனவும் படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தற்போது விஷால் – ரவி அரசு இடையே மோதல் முற்றியுள்ளது. இதனால் ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பினை பெப்சி அமைப்பு மற்றும் இயக்குநர்கள் சங்கம் இணைந்து நிறுத்தியிருக்கிறார்கள். ரவி அரசு இடமிருந்து படத்தினை விஷால் இயக்க ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே தொடங்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
இப்படத்தினை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்து வருகிறார். இதன் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள்.
இப்படத்தினை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்து வருகிறார். இதன் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடி வாங்குறவனாவது சொல்லணும்! - ஜனநாயகன் குறித்து அமீர் கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 4:54:34 PM (IST)

அடுத்து அரசியல் களம்? சினிமாவிலிருந்து விலகுகிறாரா த்ரிஷா?
வெள்ளி 20, மார்ச் 2026 10:35:50 AM (IST)

மணிரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான்: 34 ஆண்டுகால இசைப் பயணம் முடிவுக்கு வருகிறதா?
புதன் 18, மார்ச் 2026 11:20:49 AM (IST)

சர்ச்சையான நாயுடு பேச்சு: மன்னிப்பு கோரி விளக்கமளித்தார் நடிகர் பார்த்திபன்!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:10:24 PM (IST)

புடினுக்கு எதிரான ஆவணப்படத்திற்கு ஆஸ்கர்: 2026 விருது விழாவின் முக்கியத் துளிகள்!
திங்கள் 16, மார்ச் 2026 5:27:58 PM (IST)

சிறை பட வெற்றிக்குத் தமிழ் ரசிகர்களே காரணம்: இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு
சனி 14, மார்ச் 2026 11:23:29 AM (IST)

