» சினிமா » செய்திகள்
ரசிகர்கள் எதிர்பார்த்த படம் தரவில்லை : மன்னிப்பு கோரிய மணிரத்னம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 11:38:27 AM (IST)

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறியதாக இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் திரைப்படத்திற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜுன். 5 அன்று வெளியானது. படத்தின் கதை மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால் இப்படம் வணிக ரீதியாகத் தோல்வியை அடைந்தது.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் மணிரத்னம், "நானும் கமல்ஹாசனும் இணைந்து மற்றொரு நாயகனைக் கொடுப்போம் என எதிர்பார்த்தவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம். நாயகனுக்குத் திரும்புவது எங்கள் நோக்கம் அல்ல.
முற்றிலும் வித்தியாசமான ஒன்றை வழங்கவே நினைத்தோம். ஆனால், நாங்கள் வழங்கியதைவிட ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதீதமாக இருந்தது. இதனால், தக் லைஃப் படத்தைவிட ரசிகர்கள் எதிர்பார்த்த படம் வேறொன்றாகவே இருந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகை வனிதா படத்தில் அனுமதியின்றி பாடல் : வழக்கு தொடர்ந்தார் இளையராஜா!
வெள்ளி 11, ஜூலை 2025 12:35:37 PM (IST)

விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? நயன்தாரா விளக்கம்!
வியாழன் 10, ஜூலை 2025 5:41:10 PM (IST)

பாகுபலி 1, 2 பாகங்கள் மறுவெளியீடு: தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
வியாழன் 10, ஜூலை 2025 5:34:40 PM (IST)

அயோத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா
புதன் 9, ஜூலை 2025 12:20:22 PM (IST)

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)
