» சினிமா » செய்திகள்
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்: நயன்தாரா வேண்டுகோள்!
புதன் 5, மார்ச் 2025 12:30:08 PM (IST)
தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என இனி அழைக்க வேண்டாம் என ரசிகர்கள், மீடியாவுக்கு நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டுள்ளதாவது, ''என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இந்துள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதற்கு அழகு சேர்த்துள்ளது. வெற்றியின் போது என் தோளில் சாய்ந்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் ரசிகர்களான நீங்கள் உறுதுணையாக இருந்தீர்கள்.நீங்கள் பலரும் என்னை லேடி சூப்பர்ஸ்டார்' என்று அன்புடன் அழைத்து வாழ்த்துகிறீர்கள். உங்கள் ஆதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை `நயன்தாரா' என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது; ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும் அது மட்டுமே குறிக்கிறது. பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால், சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலைத்தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

