» சினிமா » செய்திகள்
சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி
திங்கள் 6, ஜனவரி 2025 4:58:37 PM (IST)

சூர்யா நடித்து வரும் படத்தின் இயக்குநரான ஆர்.ஜே.பாலாஜி வில்லனாகவும் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில் சூர்யாவுடன் ஸ்வாசிகா, இந்திரன்ஸ், நட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்றது. இதன் 2-ம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதியில் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிகிறது. இதனிடையே, இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி நடித்து வருகிறார். இதில் சூர்யா வக்கீலாக நடித்து வருகிறார். அவருக்கு எதிராக வாதாடும் வக்கீலாக ஆர்.ஜே.பாலாஜியே நடித்திருக்கிறார். இதற்கு சூர்யாவும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

