» சினிமா » செய்திகள்

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கைவிட மாட்டான்: ரஜினி புத்தாண்டு வாழ்த்து!

புதன் 1, ஜனவரி 2025 12:32:09 PM (IST)

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டு முன்பு திரண்ட ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து கூறினார். 

நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது: நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கைவிட்டு விடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வெல்கம்-2025 என அவர் நடித்த 'பாட்ஷா' படத்தில் இடம் பெற்ற வரிகளை குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறி இருக்கிறார்.

மேலும் பண்டிகை நாட்களில் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்பு ரசிகர்களை சந்திப்பது வழக்கம். கடந்த தீபாவளி அன்றும் ரசிகர்களை சந்தித்தார். புத்தாண்டையொட்டி ரஜினிகாந்தை எதிர்பார்த்து நள்ளிரவு முதல் அவரது வீட்டு முன்பு ரசிகர்கள் காத்திருந்தனர். இன்று காலை 9 மணியளவில் ரஜினி வீட்டில் இருந்து வெளியில் வந்து ரசிகர்களை சந்தித்தார். ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியதுடன் அனைவரையும் நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory