» சினிமா » செய்திகள்
நந்தா படம் எனது வாழ்க்கையையே மாற்றியது: நடிகர் சூர்யா
வெள்ளி 20, டிசம்பர் 2024 8:12:08 PM (IST)
பாலா இயக்கிய நந்தா படம் எனது வாழ்க்கையையே மாற்றியது. நந்தா இல்லா விட்டால் எனக்கு இந்த அடையாளம் கிடைத்து இருக்காது என நடிகர் சூர்யா பேசினார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா தற்போது அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தை டைரக்டு செய்துள்ளார். பாலா சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை சென்னையில் திரையுலகினர் கொண்டாடினர். இதில் நடிகர் சூர்யா பங்கேற்று பேசும்போது, "நான் 2000-ம் ஆண்டில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது பாலா என்னை போனில் அழைத்து நந்தா படத்தில் நடிக்க வைத்தார்.
நந்தா படம் எனது வாழ்க்கையையே மாற்றியது. பாலா இயக்கிய சேது படம் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் இருந்து வெளியே வர 100 நாட்கள் ஆனது. இப்படி ஒரு நடிகரால் நடிக்க முடியுமா? ஒரு இயக்குனரால் இப்படி ஒரு படத்தை இயக்க முடியுமா? என்று ஆச்சரியப்பட்டேன்.
ஆனால் அவரது இயக்கத்திலேயே நந்தா படத்தில் நான் நாயகனாக நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. நந்தா படத்தை பார்த்து விட்டு காக்க காக்க படத்தில் நடிக்க கவுதம் மேனன் அழைத்தார். காக்க காக்க படத்தை பார்த்து விட்டு ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி படத்தில் நடிக்க அழைத்தார். நந்தா படம் இல்லா விட்டால் எனக்கு இந்த அடையாளம் கிடைத்து இருக்காது. பாலாவை அண்ணன் என்று தான் அழைப்பேன்'' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

நூறு பிறவிகள் எடுத்தாலும், ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
சனி 29, நவம்பர் 2025 10:38:32 AM (IST)

