» சினிமா » செய்திகள்

ஆடுஜீவிதம் படத்துக்காக ரகுமானுக்கு ஹாலிவுட் விருது!

சனி 23, நவம்பர் 2024 12:29:56 PM (IST)



ஆடுஜீவிதம் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த பின்னணி இசைக்கான ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது வழங்கப்பட்டு உள்ளது. 

ஆஸ்கார் விருதை வென்ற ஏ.ஆர்.ரகுமான் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான ஆடுஜீவிதம் படத்துக்கும் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் பிருதிவிராஜ், அமலாபால் ஆகியோர் நடித்து இருந்தனர். ஆடுஜீவிதம் படத்தில் இடம்பெற்ற ‘பெரியோனே ரஹ்மானே' என்ற பாடலை ரபிக் அகமதுவுடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் பாடி இருந்தார்.

இந்த பாடல் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பின்னணி இசை மற்றும் பாடலை எழுதியவர் ஆகிய 2 பிரிவுகளில் உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஆடுஜீவிதம் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த பின்னணி இசைக்கான ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த விருதை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான் சார்பில் படத்தின் இயக்குனர் பிளஸ்ஸி பெற்றுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory