» சினிமா » செய்திகள்
சிவகார்த்திகேயனின் அமரன் படப்பிடிப்பு நிறைவு!
சனி 25, மே 2024 5:09:44 PM (IST)

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், மறைந்த இராணுவ வீரர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைமந்த இராணுவ வீரரின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அமரன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தை செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

20 வருடங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான்!
திங்கள் 7, ஜூலை 2025 5:08:58 PM (IST)

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினி நடிக்காதது ஏன்? இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு
வெள்ளி 4, ஜூலை 2025 4:35:23 PM (IST)

கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தேதி முடிவு?
புதன் 2, ஜூலை 2025 5:03:17 PM (IST)

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)
