» சினிமா » செய்திகள்
விஜய்யின் கோட்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
வியாழன் 11, ஏப்ரல் 2024 3:21:01 PM (IST)

விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது.
இதற்கிடையே நடிகர்கள் பிரபுதேவா மற்றும் பிரசாந்த் ஆகியோரின் பிறந்தநாளில் புதிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் கோட் படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினிக்காக கூலி படத்தில் நடித்தேன்: அமீர் கான்
வியாழன் 12, ஜூன் 2025 12:45:08 PM (IST)

சிம்பு - வெற்றி மாறன் திரைப்படம்: ஜூலையில் தாெடக்கம்..?
வியாழன் 12, ஜூன் 2025 12:00:32 PM (IST)

மாலத்தீவு சுற்றுலா தூதராக நடிகை கத்ரீனா கைப் நியமனம்!
வியாழன் 12, ஜூன் 2025 10:34:12 AM (IST)

விஜய்யின் பிறந்தநாளில் ஜனநாயகன் ஸ்பெஷல் அப்டேட்!
வியாழன் 12, ஜூன் 2025 10:27:35 AM (IST)

என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது நாகரிகம் : வைரமுத்து ஆதங்கம்
திங்கள் 9, ஜூன் 2025 11:31:54 AM (IST)

அதிக முறை எரியும் பாராசூட்டிலிருந்து குதித்து டாம் குரூஸ் கின்னஸ் சாதனை!
வெள்ளி 6, ஜூன் 2025 5:22:18 PM (IST)
