» சினிமா » செய்திகள்

படம் பிடிக்கலைன்னா காலணியால் கூட அடிங்க: 'ஹாட்ஸ்பாட்' பட இயக்குநர்

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 8:29:10 AM (IST)

ஹாட்ஸ்பாட்' படம் ரொம்ப நல்லாருக்கு. பிடிக்கல, ஏண்டா வந்தோம்னு பீல் பண்ண மாட்டீங்க. அப்படி பீல் பண்ணீங்கன்னா முன்னாடி சொன்னது போல காலணியால் கூட அடிங்க என்று இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹாட்ஸ்பாட்'. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். கடந்த மார்ச் 29- ம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட சங்க நிர்வாகிகளுக்கு இப்படம் திரையிடப்பட்டது. இதில் பேரரசு, மந்திர மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் படம் பிடிக்கவில்லை என்றால் என்னை காலணியால் கூட அடிங்க என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, "படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இன்னும் தியேட்டரில் நாங்க எதிர்பார்க்கிற கூட்டம் வரவில்லை. ஒரு வேளை ட்ரைலர் பார்த்து சில பேர் வராம இருக்காங்களா என தெரியவில்லை. மலையாள படங்களுக்கு அவ்ளோ சப்போர்ட் பன்றீங்க.

நீங்க கண்டிப்பா தியேட்டருக்கு வந்து பாத்தீங்கனா படம் பிடிக்கும். அப்படி பிடிக்கலைனா காலணியால் கூட என்னை அடிங்க. இதை சும்மா பேச்சுக்கு நான் சொல்லவில்லை. நீங்க படம் பாத்தீங்கனா, நல்லாருக்கு, ரொம்ப நல்லாருக்கு இல்ல சூப்பரா இருக்கு இப்படி தான் சொல்வீங்க. பிடிக்கல, அல்லது ஏண்டா வந்தோம்னு பீல் பண்ண மாட்டீங்க. அப்படி பீல் பண்ணீங்கன்னா முன்னாடி சொன்னது போல காலணியால் கூட அடிங்க. நீங்க தியேட்டருக்கு வந்து பார்த்தால் தான் படம் இன்னும் அதிகளவு மக்களை சென்றடையும்.

கருத்து சொல்கிற படமென்பதால் போர் அடிக்கிற மாதிரி எதுவும் சொல்லவில்லை. பயங்கர ஜாலியா தான் சொல்லியிருக்கிறோம். இது தியேட்டருக்கான படம். ஓடிடியில் பார்க்கும் போது அந்த அனுபவம் இருக்காது. ஆனால் தியேட்டரில் மக்களுடன் பார்ப்பது வேறுமாதியான அனுபவம். அதனால் முடிஞ்ச அளவிற்கு தியேட்டருக்கு வந்து பாருங்க. நீங்க சப்போர்ட் பண்ணி அதிகளவு பேசப்பட்டால் தான், இதுக்கப்புறம் பண்ணும் படமும் வித்தியாசமா பண்ணனும்னு தோணும். இல்லைனா வழக்கம் போல் படம் தான் பண்ண தோணும். அது உங்க கையில் தான் இருக்கிறது" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory