» சினிமா » செய்திகள்
குட் பேட் அக்லி: அஜித்தின் 63-வது படத்தின் பெயர் அறிவிப்பு
வெள்ளி 15, மார்ச் 2024 11:14:12 AM (IST)

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மைதிரி மூவீ மேக்கர்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வருகிற ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2025 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் படத்துக்கு கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘வில்லன்’ மற்றும் ‘ரெட்’ ஆகிய படங்களுக்கு ஆங்கில தலைப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதன் பிறகு, ’அட்டகாசம்’, ‘பரமசிவன்’, ‘கிரீடம்’, ‘அசல்’, ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘வீரம்’, ‘விவேகம்’, ‘வலிமை’, ‘துணிவு’ என ஆங்கில தலைப்பை தவிர்த்து வந்தார். இந்தச் சூழலில் தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் தனது படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படப்பிடிப்பு நிறைவு: படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 8:23:59 PM (IST)

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்!
திங்கள் 17, மார்ச் 2025 11:56:58 AM (IST)

உலகளவில் விடாமுயற்சி’ வசூலை முந்திய ‘டிராகன்’!
வியாழன் 13, மார்ச் 2025 11:05:32 AM (IST)

முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே
புதன் 12, மார்ச் 2025 5:28:29 PM (IST)

ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்கியது
செவ்வாய் 11, மார்ச் 2025 8:38:18 AM (IST)

வாடிவாசல் படத்தின் இசைப்பணிகள் துவங்கிவிட்டது: ஜி.வி. பிரகாஷ் குமார்
வெள்ளி 7, மார்ச் 2025 12:45:21 PM (IST)
