» சினிமா » செய்திகள்
விஜய் வழியில் அரசியல்...ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சிவகார்த்திகேயன்!
புதன் 13, மார்ச் 2024 5:10:31 PM (IST)
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சென்னையில் அவரது ரசிகர்களை சந்தித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித், சூர்யா போன்றோரின் பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கு நிகராக சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் ஈட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான அயலான் படமும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அயலான் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் அமரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அமரன் திரைப்படத்தை ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் 60 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக விலை கொடுத்து ஒடிடி-ல் வாங்கப்பட்ட படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக மாவீரன் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 33 கோடி ரூபாய் கொடுத்து டிஜிட்டல் உரிமையை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்று சென்னையில் அவரது ரசிகர்களை சந்தித்தார். இந்த பேன்ஸ் மீட்டில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படையெடுத்து வந்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் அரசியலில் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொங்கியுள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறார். இந்நிலையில் முழு நேரமாக அரசியலில் இறங்கவுள்ளதால் இனி புதிய படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
ஆதலால் விஜயின் இடத்தை பிடிக்கவே சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்திக்கிறார் என்று தகவல்கள் பரவி வருகிறது. மேலும் விஜய் தனது ரசிகர் மன்றம் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கி தான் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அது போலவே அரசியலில் சிவகார்த்திகேயன் வருவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிராமண சமூகத்தைப் பற்றி அவதூறு கருத்து: மீண்டும் மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:31:22 PM (IST)

சூர்யாவின் ரெட்ரோ’ ஒரு முழுமையான காதல் கதை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 11:15:33 AM (IST)

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: தக் லைஃப் படவிழாவில் கமல்ஹாசன் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 3:35:06 PM (IST)

வாய்ப்பு வரும்போது விட்டுவிடாதீர்கள்: ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 12:03:23 PM (IST)

கமல் - சிம்பு நடிக்கும் தக் லைப் படத்தின் ஜிங்குச்சா பாடல் வெளியானது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:12:11 PM (IST)

நடிகர் ஸ்ரீ உடல்நிலைப் பற்றிய வதந்திகளை தவிர்க்கவும்: குடும்பத்தினர் வேண்டுகோள்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:51:19 AM (IST)
