» சினிமா » செய்திகள்
லால் சலாம் தோல்விக்கு ரஜினிதான் காரணமா? ஐஸ்வர்யா பேட்டி!!
வியாழன் 7, மார்ச் 2024 11:42:27 AM (IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கியது தான் லால் சலாம் படம் தோல்வி அடைய காரணம் என இயக்குநர் ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

மொய்தின் பாயாக ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தனுஷின் 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குநராக லால் சலாம் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்பா ரஜினிகாந்தை மொய்தின் பாயாக நடிக்க வைத்து மோசம் செய்ததுதான் மிச்சம்.
படுதோல்வி அடைந்த லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குநராக பெரும் போராட்டத்திற்கு பிறகு மாறிய நிலையில் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக லால் சலாம் படத்தை கொடுத்திருந்தார். தேசிய விருது வாங்கப் போகிற கதை, உண்மை சம்பவம் என்றெல்லாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார். ஆனால், படத்தைப் பார்க்க யாருக்கும் அந்த ஃபீல் வரவே இல்லை என்பதுதான் படத்தின் தோல்விக்கான காரணம் என பலரும் கூறினர்.
தன்னுடைய கதையில் இடைவேளைக்கு பிறகுதான் மொய்தீன் பாய் கதாபாத்திரம் வருவதாக இருந்தது. ஆனால், கமர்சியலுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முதலிலேயே காட்ட வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்ட நிலையில், என்ன செய்வதென்றே தெரியாமல் கடைசி இரண்டு நாட்களில் எடிட்டிங் டேபிளில் வந்து மொய்தீன் பாய் காட்சிகளை கொஞ்சம் முன்னாடி கொண்டுவந்ததுதான் இந்த படத்தில் நான் செய்த பெரிய தவறு என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
என்னோட மனைவி இன்னைக்கு உயிரோட இருக்க காரணமே ரஜினிகாந்த் தான்.. லிவிங்ஸ்டன் நெகிழ்ச்சி!என்னோட மனைவி இன்னைக்கு உயிரோட இருக்க காரணமே ரஜினிகாந்த் தான்.. லிவிங்ஸ்டன் நெகிழ்ச்சி!
தான் இயக்க விரும்பிய லால் சலாம் படத்தில் செந்தில் கதாபாத்திரம்தான் கதையின் நாயகனாக இருந்தது. ஆனால், எப்போது அந்த படத்திற்குள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளே நுழைந்தாரோ, அதன் பிறகு ரசிகர்கள் கதையை விட்டுவிட்டு மொய்தீன் பாயை பார்க்கத் தொடங்கியதும் ரசிக்கத் தொடங்கியது தான் இந்த படம் தோல்வி அடைய காரணம் எனக் கூறியுள்ளார்.
ஆசைப்பட்டு உள்ளே வந்த ரஜினிகாந்த்: மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நாம நடித்தால் படம் நல்லா வரும் என ஆசைப்பட்டு உள்ளே வந்த ரஜினிகாந்த் அந்த படம் தோல்வியடையவே காரணமாக மாறிவிட்டார் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருப்பது ரஜினிகாந்த் ரசிகர்களையே கொந்தளிக்கச் செய்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’ படப்பிடிப்பு நிறைவு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:53:30 PM (IST)

காதலர் தினம் கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்
சனி 15, பிப்ரவரி 2025 3:36:49 PM (IST)

ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா?- ராம்கோபால் வர்மா சர்ச்சை பேச்சு
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:35:59 PM (IST)

விஜய் மீது முட்டையை வீச திட்டம் : ரசிகர்களுக்கு ரஜினி கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:54:19 PM (IST)

விடாமுயற்சி ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 3:25:22 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் பறந்து போ!
வெள்ளி 31, ஜனவரி 2025 5:27:44 PM (IST)
