» சினிமா » செய்திகள்

சீரியல் நடிகையை கரம்பிடித்தார் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி!

திங்கள் 11, டிசம்பர் 2023 11:37:20 AM (IST)பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு சீரியல் நடிகை சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது.

தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’, ரஜினியின் ‘அண்ணாத்த’, ஜெயிலர்’, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘டாக்டர்’ படத்தில் இவரது நகைச்சுவை வசனங்கள் பெரும் பிரபலமாகின.

இந்நிலையில், சீரியல் நடிகையான சங்கீதாவுடன் ரெடின் கிங்ஸ்லிக்கு சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இத்திருமணத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ரெடின் கிங்ஸ்லிக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சங்கீதா ஒரு சில தொலைகாட்சி தொடர்களிலும், சில திரைப் படங்களிலும் நடித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory