» சினிமா » செய்திகள்

மிக்ஜம் நிவாரணப் பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் நிதி!

திங்கள் 11, டிசம்பர் 2023 10:29:46 AM (IST)மிக்ஜம் பாதிப்பு  நிவாரணப் பணிகளுக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதியிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.

இதுகுறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் –  இயக்கங்கள் - தனிநபர்கள் என பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர். 

இந்நிலையில், நம்மை சந்தித்த போது, நடிகர் – சகோதரர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் - நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் - இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory