» சினிமா » செய்திகள்

இணையதளத்தில் சிவகார்த்திகேயன் படக்காட்சி கசிந்தது

வியாழன் 7, டிசம்பர் 2023 8:17:29 PM (IST)

சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு காட்சி இணையதளத்தில் கசிந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான், பிரின்ஸ், மாவீரன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. அவரது அயலான் படம் சில பிரச்சினைகளில் சிக்கி முடங்கி உள்ளது. இந்த படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. தற்போது சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். 

இதில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதிகட்டத்தில் உள்ள நிலையில் ரகசியமாக நடத்தப்பட்ட படப்பிடிப்பு காட்சி இணையதளத்தில் கசிந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கசிந்த வீடியோவில் சாய்பல்லவி குழந்தையுடன் சிவகார்த்திகேயனுக்காக காத்து இருப்பது போன்ற காட்சி இடம்பெற்று உள்ளது. இது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியை இணையதளத்தில் பகிர வேண்டாம் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory