» சினிமா » செய்திகள்

21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, கமல்: வைரல் புகைப்படங்கள்

வியாழன் 23, நவம்பர் 2023 4:06:52 PM (IST)21 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமலின் படங்கள் ஒரே ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகிலிருந்து மற்றொரு அரங்கில், ரஜினி நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கும் ‘ரஜினி170’ படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்தப் படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது.

இந்நிலையில், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரஜினிகாந்த், ‘இந்தியன் 2’ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கமல்ஹாசனைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனையறிந்த கமல்ஹாசன் "என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்” என காலை 8 மணிக்கே உடனடியாக ‘ரஜினி170’ ஷீட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்து, ரஜினிக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார்.

கமல்ஹாசனைக் கண்ட ரஜினிகாந்த் மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவிக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. முன்னதாக ‘பாபா’, ‘பஞ்சதந்திரம்’ படங்கள் இதே இடத்தில் ஷீட்டிங் நடைபெற்றத போது, இருவரும் சந்தித்துக் கொண்டனர். தற்போது 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory