» சினிமா » செய்திகள்

ரஜினி வீட்டில் நவராத்திரி விழா: முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், பங்கேற்பு!

புதன் 25, அக்டோபர் 2023 12:00:24 PM (IST)நடிகர் ரஜினி வீட்டில் நடந்த நவராத்திரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உட்பட பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கொண்டாட்டம் களைகட்டும். இந்த ஆண்டும் நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் செய்திருந்தார். அத்துடன் ஏராளமான விவிஐபிகளுக்கும் லதா ரஜின்காந்த் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அழைப்பை ஏற்றுதான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வி, நடிகர் விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் ரஜினி வீட்டில் சங்கமித்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் மனைவியுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அதேபோல திரை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுள்ளதால் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ரஜினியின் மனைவியும், அவரது மகள்கள் மற்றும் பேரன்கள் இந்த விழாவுக்கு வந்தவர்களை வரவேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory