» சினிமா » செய்திகள்

ஆட்டோ டிரைவர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடிய லெஜண்ட் சரவணன்!

புதன் 25, அக்டோபர் 2023 11:19:16 AM (IST)ஆட்டோ டிரைவர்களுடன் நடிகர் லெஜண்ட் சரவணன் ஆயுதப் பூஜை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன் ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவ்வப்போது லெஜண்ட் சரவணன் ட்விட்டரில் பகிரும் புகைப்படங்கள் வைரலானது. இவரின் புதிய படத்துக்கான அப்டேட்டை பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், ஆயுதப் பூஜையை திங்கள்கிழமை இரவு ஆட்டோ டிரைவர்களுடன் சரவணன் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஆட்டோ டிரைவர்களுக்கு பரிசு வழங்கிய சரவணன், அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆட்டோ ஓட்டினார்.தற்போது லெஜண்ட் சரவணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory