» சினிமா » செய்திகள்
வெங்கட் பிரபு இயக்கும் விஜய் 68 படத்தின் பூஜை!
செவ்வாய் 24, அக்டோபர் 2023 4:35:16 PM (IST)

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
இதில் முதலில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நட்பு பற்றிய இந்தப் பாடலில், விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து பங்கேற்றுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள இந்தப் பாடல், படத்தின் ஓபனிங் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு இன்று (அக்.24) வெளியிட்டுள்ளது. இதில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் பற்றி அறிவிப்புகளையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் மீது முட்டையை வீச திட்டம் : ரசிகர்களுக்கு ரஜினி கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:54:19 PM (IST)

விடாமுயற்சி ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 3:25:22 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் பறந்து போ!
வெள்ளி 31, ஜனவரி 2025 5:27:44 PM (IST)

பராசக்தி டைட்டிலை யாரும் பயன்படுத்தக் கூடாது - நேஷனல் பிக்சர்ஸ் எச்சரிக்கை
வெள்ளி 31, ஜனவரி 2025 11:31:50 AM (IST)

கர்நாடக அரசின் விருதை நிராகரித்த கிச்சா சுதீப்!
வெள்ளி 24, ஜனவரி 2025 12:07:26 PM (IST)

பிக்பாஸ் சீசன் 8 : பட்டம் வென்றார் முத்துக்குமரன்!
திங்கள் 20, ஜனவரி 2025 10:43:49 AM (IST)
