» சினிமா » செய்திகள்

இளம் வயதினருக்கு மாரடைப்பு.. கமல்ஹாசன் அறிவுரை!

செவ்வாய் 24, அக்டோபர் 2023 4:32:11 PM (IST)

மாரடைப்பு ஏற்படுவது தாெடர்பாக இளம் வயதினருக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார்.

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர்கள் வினோத், மணிரத்னம் ஆகியோர் படங்களில் நடிக்க உள்ளார். இதற்கிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘சமீப காலமாக இளம் வயதைச் சேர்ந்த பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. 30 - 40 வயதுகளில் இப்பிரச்னை வருவது வியப்பாக இருக்கிறது. இதுகுறித்து என் மருத்துவ நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் இதற்கு மூன்று காரணங்களைக் கூறினர். 

உறக்கமின்மை, உணவுப் பழக்கம், செயலாற்றாமல் இருப்பது. இந்த 3 காரணங்களாலே பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுகிறது. தூக்கத்திற்கும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. உணவே மருந்தாக இருக்க வேண்டும். மருந்து உணவாக இருக்கக் கூடாது. உடல் செயல்பாட்டுகளை நாம் செய்வதில்லை. அசையாமல் உருளைக் கிழங்குகளைப் போல் இருக்கிறோம். கிரிக்கெட் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் விளையாடுவதிலும் இருக்க வேண்டும். ஓடி விளையாடு பாப்பா.. நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. இளைஞர்கள் இதை கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளக் கூடாது.” என அறிவுரை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory