» சினிமா » செய்திகள்

விமானத்தில் பாலியல் தொல்லை : பிரபல நடிகை போலீசில் புகார்...!

வியாழன் 12, அக்டோபர் 2023 12:29:02 PM (IST)

விமானத்தில் சக பயணி ஒருவர் குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை திவ்ய பிரபா போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர் தமிழிலும் 'கயல்', 'கோடியில் ஒருவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சமீபத்தில் மும்பையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் சென்றேன். விமானத்தில் இருந்த சக பயணி ஒருவர் குடிபோதையில் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

இதுதொடர்பாக அங்குள்ள விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தபோது அவர்கள் கண்டு கொள்ளவில்லை.ஆனாலும் நான் தொடர்ந்து புகார் செய்து கொண்டே இருந்ததால், எனது இருக்கையை மட்டும் மாற்றிவிட்டு சென்றனர்.கொச்சி வந்ததும் விமான நிலைய அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தேன். கேரள போலீசாருக்கும் ஆன்-லைன் மூலமாக புகார் அளித்துள்ளேன்.

இந்த விஷயத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது" என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory