» சினிமா » செய்திகள்

நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:31:07 PM (IST)

நடிகை வஹீதா ரஹ்மானுக்கு(85)  தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1955 ஆம் ஆண்டு ’ரோஜுலு மராயி’ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வஹீதா ரஹ்மான். அதன்பின், ஹிந்தியில் ‘பைசா’, ‘கைடு’, ‘ககாஸ்ஹே போல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகச்சிறந்த கவனத்தைப் பெற்றார். குறிப்பாக, 1956-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். 

90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வஹீதா சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஒருமுறையும் மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு, 1972-ல் பத்ம ஸ்ரீ விருதையும் 2011-ல் பத்ம பூஷண் விருதையும் வழங்கி கௌரவித்தது. இந்நிலையில், இன்று வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது வஹீதா ரஹ்மானுக்கு(85) அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory