» சினிமா » செய்திகள்
விஜய் நடிக்கும் லியோ படத்தின் போஸ்டர் வெளியீடு!
திங்கள் 18, செப்டம்பர் 2023 10:35:15 AM (IST)
விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. படத்தில் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான படத்தின் ‘நாரெடி தான் வரவா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சீரியல் நடிகையை கரம்பிடித்தார் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி!
திங்கள் 11, டிசம்பர் 2023 11:37:20 AM (IST)

மிக்ஜம் நிவாரணப் பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் நிதி!
திங்கள் 11, டிசம்பர் 2023 10:29:46 AM (IST)

லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லாதீர்கள்: நயன்தாரா வேண்டுகோள்!
சனி 9, டிசம்பர் 2023 5:32:55 PM (IST)

இணையதளத்தில் சிவகார்த்திகேயன் படக்காட்சி கசிந்தது
வியாழன் 7, டிசம்பர் 2023 8:17:29 PM (IST)

தவறான நிர்வாகமே வெள்ள பாதிப்புக்கு காரணம்: சந்தோஷ் நாராயணன் கருத்து!
புதன் 6, டிசம்பர் 2023 5:46:06 PM (IST)

கமல் படத்தில் இணைந்த கவுதம் கார்த்திக்!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:47:41 PM (IST)
