» சினிமா » செய்திகள்
சிம்பு, தனுஷ் உட்பட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு
வியாழன் 14, செப்டம்பர் 2023 3:27:36 PM (IST)

நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்டு விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு பேருக்கும் ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டது. நடிகர் சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார்கள் அளித்தும் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டது.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளாதது தொடர்பாக அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. நடிகர் தனுஷ் தேனாண்டாள் பிலிப்ம்ஸ் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனுஷுக்கு ரெட் கார்டு விதிக்கப்படுகிறது. மேலும் தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா, முறையாக பதிலளிக்காமல் நழுவுவதால் அவருக்கும் ரெட் கார்டு வழங்குவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

