» சினிமா » செய்திகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
திங்கள் 11, செப்டம்பர் 2023 12:15:13 PM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த்தின் 170வது படம் குறித்த பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், 171வது படம் குறித்த உறுதியான தகவல்கள் இன்று வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 171வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் 171வது பட அறிவிப்பை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி. இப்படத்தை எழுதி இயக்குபவர் லோகேஷ் கனகராஜ். தலைவரின் 171வது படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவிருக்கிறார். ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்துடன் சன்பிக்சர்ஸ் மீண்டும் இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகிவந்த நிலையில் தற்போது இது உறுதியாகியுள்ளது. தற்போது விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை லோகேஷ் இயக்கி முடித்துள்ளார். வரும் அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்துக்குப் பிறகு ரஜினி படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

