» சினிமா » செய்திகள்

மாரிமுத்து இறப்பு அதிர்ச்சியளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்

வெள்ளி 8, செப்டம்பர் 2023 4:10:20 PM (IST)

மாரிமுத்துவின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் மாரிமுத்து 'எதிர் நீச்சல்' தொலைக்காட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் இயக்குனர் மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார். இவர் 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து 20-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்திலும் நடித்துள்ளார். நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மாரிமுத்துவின் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory