» சினிமா » செய்திகள்

ஜெயநகர் பணிமனைக்கு நடிகர் ரஜினி திடீர் விசிட்!

செவ்வாய் 29, ஆகஸ்ட் 2023 4:30:08 PM (IST)



நடிகர் ரஜினிகாந்த் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு திடீரென சென்று அங்கிருந்த பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள், ஊழியர்களுடன் கலந்துரையாடினார். 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் உலக அளவில் ரூ.530 கோடியைத் தாண்டி வசூலித்து வருகிறது. பட ரிலீஸூக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்தார். தொடர்ந்து உத்தரபிரதேசம் சென்றிருந்த அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து காலில் விழுந்த புகைப்படங்கள் வைரலாகின. 

இந்நிலையில் தற்போது பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென வருகை தந்துள்ளார். அப்போது அங்கிருந்த பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள், பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ரஜினி திரையுலகில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு இந்த பணிமனையில் தான் நடத்துனராக பணியாற்றினார். அடுத்து ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பில் விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory