» சினிமா » செய்திகள்
நடிகர் வடிவேலுவின் தம்பி காலமானார்
திங்கள் 28, ஆகஸ்ட் 2023 4:33:43 PM (IST)
நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 52.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் (52). இவர் ‘மலைக்கோவில் தீபம்’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஆக. 28) காலை விரகனூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். வடிவேலுவின் தாயார் சரோஜினி வயது முதிர்வு காரணமாக கடந்த ஜனவரி மாதம் காலமானார். இந்த சூழலில், தற்போது வடிவேலுவின் தம்பியும் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

நூறு பிறவிகள் எடுத்தாலும், ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
சனி 29, நவம்பர் 2025 10:38:32 AM (IST)

