» சினிமா » செய்திகள்
பிரபல நடிகர் 25 வயதில் மாரடைப்பால் மரணம்!
சனி 19, ஆகஸ்ட் 2023 4:48:16 PM (IST)
தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகர் பவன் சிங் என்பவர் தனது 25 வயதில் மாரடைப்பால் காலமானார்.
தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகர் பவன் சிங். இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 25 வயதே ஆகும் இவர், இந்தியில் சில தொடர்களில் நடித்து வந்ததால், மும்பையில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பவன் சிங் உடலை அவரது சொந்த கிராமமான மாண்டியாவுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். சொந்த ஊரில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. சமீபத்தில், சின்னத்திரை நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர்(30) மாரடைப்பால் மரணமடைந்தார். தொடர்து கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா தாய்லாந்தில் விடுமுறைக்கு சென்றபோது மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

