» சினிமா » செய்திகள்
சினிமாவில் கமல்ஹாசன் 64வது ஆண்டு: குவியும் வாழ்த்துகள்!
சனி 12, ஆகஸ்ட் 2023 4:57:28 PM (IST)

சினிமாவில் கமலுக்கு 64வது ஆண்டு தொடங்குகிறது. இதனையொட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், பாடகர், நடனக் கலைஞர், தயாரிப்பாளர் என எந்தத் துறை எடுத்தாலும் அதில் கில்லாடியாக பணியாற்றும் திறமைசாலி. தமிழ் சினிமாவில் பல வகையான புதிய டெக்னிக்கலான விசயங்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். படங்கள் வசூலில் பிர்ச்னை ஏற்பட்டாலும் தனது சோதனை முயற்சியை கைவிடுவதே இல்லை. ஓடிடி வருவதையும் முன்னமே கணித்த என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கமல்தான்.
மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பதம் ஸ்ரீ, பத்ம விபுஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழை தவிர்த்து மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் நடித்து அங்ஜேயும் தனித்து மிளிர்ந்தவர் கமல்ஹாசன்.
லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்தியன் 2 , கல்கி 2898 படத்திலும் நடித்து வருகிறார். கமல் 233வது படத்தினை எச்.வினோத்தும் கமல் 234 படத்தினை மணிரத்னமும் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோர் தனது ட்விட்டர் பக்கத்தில் கமலின் பல படங்களின் கதாபாத்திரங்கள் அடங்கிய போஸ்ட்ரை பகிர்ந்து தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து நடிகர் கமல், "64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக” என கமல் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

நூறு பிறவிகள் எடுத்தாலும், ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
சனி 29, நவம்பர் 2025 10:38:32 AM (IST)

