» சினிமா » செய்திகள்

சினிமாவுக்கு பொற்காலம் தொடங்கி இருக்கிறது: கமல்ஹாசன் கருத்து!!

செவ்வாய் 2, மே 2023 4:01:02 PM (IST)



சினிமாவுக்கு பொற்காலம் தொடங்கியிருப்பதாக ‘பொன்னியின் செல்வன் 2’ படம் பார்த்த பின்பு நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சென்னை அடையாறில் உள்ள பிரிவியூ திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தைப் பார்த்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னுடைய முதல் விருப்பம் ஆசையெல்லாம் நல்ல சினிமாக்களை பார்க்க வேண்டும் என்பதுதான். அத்தகைய ஒரு சினிமாவாக ‘பொன்னியின் செல்வன்’ அமைந்துள்ளது. 

இதனை நான் ஒரே படமாகத்தான் பார்க்கிறேன். இதை நாம் ஒரு முழு காவியமாகத்தான் எடுத்துகொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகள் எல்லா படங்களுக்கும் இருக்கும். அந்த மாற்றுகருத்து இதில் இருந்தாலும் கூட மக்கள் இதனை பெரியதாக ஆதரிக்கிறார்கள் என்பதை செய்திகள் மூலம் அறிகிறேன். மெத்த மகிழ்ச்சியை இது அளிக்கிறது.

தமிழ் சினிமாவின் பெருமை; தமிழரின் பெருமையை போற்றும் இத்தகைய படத்தை எடுக்க வேண்டும் என்பதற்கு தனித் துணிச்சல் வேண்டும். அதனை எடுத்து முடித்திருக்கும் முக்கியமான வீரன் மணிரத்னம். அவரை பாராட்ட வேண்டும். அவருக்கு உறுதுணையாக தோள் கொடுத்து, வாள் கொடுத்து உதவியவர்கள் நட்சத்திர பட்டாளப் படை. இதுபோன்ற அத்தனை நட்சத்திரங்களையும் ஒன்றுகூடி பார்த்து நீண்ட நாளாகிவிட்டது. நல்ல பொற்காலம் துவங்கியிருப்பதாகவே நான் நினைக்கிறேன். இது போற்றப்பட வேண்டிய வெற்றி” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory