» சினிமா » செய்திகள்

நடிகர் அஜித் குமாரின் புதிய படம் விடாமுயற்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

திங்கள் 1, மே 2023 12:23:12 PM (IST)



நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை அவரது புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைத்துள்ளன்ர். 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக நடிகர் அஜித் குமாரின் அடுத்த படமான ஏகே 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. இந்த நிலையில் கதை குளறுபடியால் தற்போது அந்த வாய்ப்பு இயக்குநர் மகிழ் திருமேனிக்கு கைமாறியுள்ளது குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory