» சினிமா » செய்திகள்

சிவகார்த்திகேயனின் அயலான் தீபாவளிக்கு ரிலீஸ்!!

திங்கள் 24, ஏப்ரல் 2023 5:10:32 PM (IST)



சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' திரைப்படம் 2023 தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அயலான் படத்தின் ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அயலான் படத்தில் 4500-க்கும் அதிகமான விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் படம் முழுவதும் ஏலியன் கதாப்பாத்திரம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயலானுடன் கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயராகுங்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory