» சினிமா » செய்திகள்

நடிகர் தனுஷ்-க்கு யூத் ஐகான் விருது: மத்திய அமைச்சர் அனுராக் வழங்கினார்

வெள்ளி 21, ஏப்ரல் 2023 3:04:53 PM (IST)



சிஐஐ தக்‌ஷின் மாநாட்டில் நடிகர் தனுஷ்-க்கு யூத் ஐகான் விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார். 

தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் நேரடியாக நடித்து வருபவர் நடிகர் தனுஷ். தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். தான் சார்ந்துள்ள திரைத்துறையில் நடிகர் என்ற வட்டத்தோடு மட்டும் நின்றுவிடாமல் பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இயங்கி வருகிறார் தனுஷ். இந்தச் சூழலில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுள்ளது.

"40 வயதில்யூத் ஐகான் விருதை பெறுவேன் என எண்ணவில்லை. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது என்பதை நினைவூட்டும் விதமாக இது உள்ளது. எனது உருவத்தை தொடக்கத்தில் சினிமா ஏற்றுக் கொள்ளவில்லை. கனவு கண்டேன். இப்போது இங்கு நிற்கிறேன்” என விருதைப் பெற்ற தனுஷ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory