» சினிமா » செய்திகள்

நடிகர் மம்மூட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் காலமானார்

வெள்ளி 21, ஏப்ரல் 2023 11:23:18 AM (IST)

நடிகர் மம்மூட்டியின் தாய் பாத்திமா இஸ்மாயில்(93) வயது மூப்பு மற்று உடல்நலக் குறைவு காரணமாக இன்று  காலமானார்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் (93), வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பாத்திமா இஸ்மாயிலின் இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் செம்பை ஜமாத் பள்ளிவாசலில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் மம்மூட்டியின் தயார் மறைவு செய்தி அறிந்து திரையுல பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory