» சினிமா » செய்திகள்

லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்!

சனி 11, மார்ச் 2023 5:13:41 PM (IST)விஜய் நடிப்பில் உருாவி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ' (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட்டாக புதிய வீடியோ ஒன்ற படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் 'லியோ' படக்குழுவினரை நடிகர் சஞ்சய் தத் சந்தித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள லியோ படத்தின் தயாருப்பு நிறுவனம் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ அதில் பிரத்யேக வீடியோ வேணும் னு கேட்டீங்களாமே, எங்களுக்கே கேட்டுருச்சு என பதிவிட்டு அந்த வீடுயோவை வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory