» சினிமா » செய்திகள்

கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி!

வெள்ளி 10, மார்ச் 2023 11:46:38 AM (IST)கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ள படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். 

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு, ஓபிலி கிருஷ்ணாவுடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு கிடைந்த இந்த வாய்ப்பு குறித்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "என் வாழ்க்கையின் நிகழ்ந்துள்ள கற்பனைக்கு எட்டாத அற்புதங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். உலக நாயகனுக்கு கதை சொல்லும் பாக்கியம் கிடைத்தது மற்றும் அவரின் தயாரிப்பின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கனவு நனவானது; அற்புதங்கள் நிகழ்கின்றன” என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory