» சினிமா » செய்திகள்

ஹாலிவுட் விருது வென்ற ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’

சனி 25, பிப்ரவரி 2023 3:54:35 PM (IST)ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு ‘ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன்’ விருது கிடைத்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் - ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படம் உலகம் முழுவதும் ரூ.1200 கோடி வசூலை குவித்தது. அண்மையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு..’ பாடலுக்காக ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ’கோல்டன் குளோப்’ விருது கிடைத்தது.

மேலும், ‘கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது’ விழாவில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த பாடல் ஆகியவற்றுக்கான விருதுகளை பெற்றது. இந்நிலையில், தற்போது ‘ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன்’ விருது விழாவில் 4 பிரிவுகளின் கீழ் ‘ஆர்ஆர்ஆர்’ படம் விருதுகளை வென்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற்ற விருது விழாவில், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஆக்‌ஷன் திரைப்படம், சிறந்த சண்டைக் காட்சி மற்றும் சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகளை ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வாங்கிக் குவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory