» சினிமா » செய்திகள்

செவிலியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை: பாலகிருஷ்ணா வருத்தம்

புதன் 8, பிப்ரவரி 2023 12:10:38 PM (IST)

செவிலியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வருத்தம் தெரிவித்துள்ளார். 

பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா. இவர் ‘ஆஹா’ ஓடிடி தளத்துக்காக பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதில், சமீபத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கலந்துகொண்டார். அப்போது பாலகிருஷ்ணா பேசும்போது, செவிலியரை வர்ணித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பாலகிருஷ்ணா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று செவிலியர்கள் கோரிக்கை விடுத்தனர். எதிர்ப்பு வலுத்ததை அடுத்து பாலகிருஷ்ணா வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: செவிலியர்களை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் ஆதாரமற்ற விஷயங்களை நிராகரிக்கிறேன். நான் சொன்னதன் அர்த்தம் முற்றிலும் திரிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு சேவை செய்யும் என் சகோதரிகள் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. எங்களின் புற்றுநோய் மருத்துவமனையில் அவர்களின் சேவைகளைப் பார்த்திருக்கிறேன். என் வார்த்தைகள் உங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன்” என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory