» சினிமா » செய்திகள்

பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - நயன்தாரா அறிவுரை

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 4:30:37 PM (IST)

பெற்றோருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுக்காக 10 நிமிடத்தையாவது செலவழியுங்கள் என மாணவர்களுக்கு நயன்தாரா அறிவுரை வழங்கியுள்ளார். 

நடிகை நயன்தாரா, சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசும்போது அவர் கூறியதாவது: கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சியானது. இந்த நேரத்தில் யாருடன் பழகுகிறீர்கள் என்பது முக்கியமானது. நீங்கள் நல்ல நண்பர்களைத் தேர்வுசெய்து பழக வேண்டும். கெட்ட நண்பர்களோடு சேர்ந்தால், வாழ்க்கை மாறிவிடும். கல்லூரி நாட்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் எதிர் காலத்திற்கானது என்பதை மறந்துவிடாதீர்கள். 

கல்லூரி முடிந்து வெற்றியடைந்த நபராக, திறமையானவராக மாறினாலும் பணிவாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். கல்லூரியில் நண்பர்களோடு ஜாலியாக இருக்கலாம், அதே நேரம் உங்கள் பெற்றோருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுக்காக 10 நிமிடத்தையாவது செலவழியுங்கள். அதில் தான் அவர்களின் மகிழ்ச்சி இருக்கிறது. இவ்வாறு நயன்தாரா கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory