» சினிமா » செய்திகள்

திரைப்பட இயக்குநர் டி.பி. கஜேந்திரன் மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி - கமல்ஹாசன் இரங்கல்

திங்கள் 6, பிப்ரவரி 2023 12:01:23 PM (IST)பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு  நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன்  உடலநலக் குறைவால் நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்.  அவரது மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

இந்நிலையில், டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், எந்த விஷயத்தையும் நகைச்சுவையோடு சொல்வதன் வலிமையை அறிந்தவர் இயக்குநர் சி.பி. கஜேந்திரன். அவருக்கான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory