» சினிமா » செய்திகள்

விஜய்யின் வாரிசு பொங்கலுக்கு ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு

புதன் 30, நவம்பர் 2022 10:48:28 AM (IST)நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் உலகம் முழுவதும் எதிர்வரும் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்திற்கான வசனத்தை விவேக் எழுதி உள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுகிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே’ கடந்த 5-ம் தேதி வெளியாகி இருந்தது. இதனை நடிகர் விஜய் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory