» சினிமா » செய்திகள்

மஞ்சிமா மோகனை கரம்பிடித்த கௌதம் கார்த்திக்!

திங்கள் 28, நவம்பர் 2022 3:51:48 PM (IST)



சென்னையில் நடிகை மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்தித் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய  நண்பர்கள் உறவினர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

கடந்த 2013-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனாக இவர், ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல, கடந்த 2016-ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். ‘களத்தில் சந்திப்போம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் கடந்த 2019 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான ‘தேவராட்டம்’ படத்திலிருந்தே காதலித்ததாக கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 23-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கௌதம் கார்த்தி தான் முதலில் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், நேரம் கேட்டு பின் யோசித்து மஞ்சிமா மோகன் அவருக்கு பதில் கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இருவரும் சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். இன்று காலை நடைபெற்ற திருமணத்தில் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பொங்கல் ரேசில் கமல், அஜித் படங்கள்!

வியாழன் 12, செப்டம்பர் 2024 3:32:13 PM (IST)

சுந்தர்.சி - வடிவேலு இணையும் ‘கேங்கர்ஸ்’

வியாழன் 12, செப்டம்பர் 2024 11:28:12 AM (IST)

மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு!

திங்கள் 9, செப்டம்பர் 2024 3:44:57 PM (IST)


Sponsored Ads


CSC Computer Education




Thoothukudi Business Directory