» சினிமா » செய்திகள்

முன்னாள் டிஜிபி மீதான ரூ. 2.70 கோடி மோசடி வழக்கு: கமிஷனர் அலுவலகத்தில் சூரி ஆஜா்!

வெள்ளி 25, நவம்பர் 2022 12:36:11 PM (IST)

முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மீது கொடுத்திருந்த மோசடி புகாா் தொடா்பாக சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடிகா் சூரி விசாரணைக்கு ஆஜரானாா்.

நடிகா் சூரியிடம் ரூ. 2.70 கோடி பண மோசடி செய்ததாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மீது ஏற்கெனவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கில் மனுதாரரான சூரி 3 முறை காவல் ஆணையா் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளாா். 

இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகா் சூரி நேற்று வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்தாா். அங்கு அவா், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் முன்னிலையில் 4-ஆவது முறையாக ஆஜராகி, தன்னிடம் பண மோசடி செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory