» சினிமா » செய்திகள்

வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்த யோகி பாபு

வியாழன் 24, நவம்பர் 2022 4:49:29 PM (IST)



சென்னையில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  நடிகர் யோகிபாபு வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்தார்.

குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் குப்பைகளை சேரித்து வரும் உர்பேசர் ஸ்மித் தனியார் நிறுவனம் சார்பில், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த குறும்படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு தூய்மைப் பணியாளராக நடித்துள்ளார். இந்த குறும்பட படப்பிடிப்பில் யோகி பாபு கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கினார். மேலும் தூய்மை பணியாளர்கள் போன்று சீருடை அணிந்து, 3 சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வாங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory